Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

‘நறுமுகை’ இ-காமர்ஸ் தளம் - டிஜிட்டல் முறையில் அசத்தும் பெண் விவசாயிகள்

‘நறுமுகை’  இ-காமர்ஸ் தளம் - டிஜிட்டல் முறையில் அசத்தும் பெண் விவசாயிகள்
பெண் விவசாயிகள்

சேலத்தைச் சேர்ந்த ஆசிய பெண் விவசாயிகள் கூட்டமைப்பின் கீழ் இயங்கும் 21 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இணைந்து ‘நறுமுகை’ என்ற பிரத்யேக மின்னணு வர்த்தகத் தளத்தை தொடங்கியுள்ளனர்.

பகிரவும் WhatsApp Facebook

சேலம்:

பெண் விவசாயிகளைத் தொழில்முனைவோராக உயர்த்தும் டிஜிட்டல் முயற்சியாக சேலத்தைச் சேர்ந்த ஆசிய பெண் விவசாயிகள் கூட்டமைப்பின் கீழ் இயங்கும் 21 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இணைந்து ‘நறுமுகை’ என்ற பிரத்யேக மின்னணு வர்த்தகத் தளத்தை தொடங்கியுள்ளனர்.

கிராமப்புற பெண் விவசாயிகளின் இயற்கை வேளாண் விளைபொருட்களை நேரடியாக நகர்ப்புற நுகர்வோரிடம் சேர்க்கும் டிஜிட்டல் பாலமாக இது உருவெடுத்துள்ளது.
சுத்தமான மரச்செக்கு எண்ணெய்கள் மற்றும் பாரம்பரிய சிறுதானியங்கள் பிரத்யேகப் பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. தயாரிப்பு முறை, உணவுப் பாதுகாப்புத் தரநிலைகள் ஆகியவை தெளிவாகக் குறிப்பிடப்பட்டு நுகர்வோரின் நம்பிக்கையைப் பெறுவதாக அமைப்பினர் சுட்டிக்காட்டுகின்றனர்.

டிஜிட்டல் பரிவர்த்தனை வசதிகள், தடையற்ற ஆர்டர் முறைமை மற்றும் விநியோகக் கண்காணிப்பு ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும். நாடு முழுவதும் விரைவான விநியோகச் சேவையை இத்தளம் உறுதிசெய்கிறது.

21 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டு முயற்சியால் இடைத்தரகர்கள் முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டு, நியாயமான விலையில் நுகர்வோருக்குப் பொருட்கள் கிடைப்பதுடன், கிராமப்புறப் பெண் விவசாயிகளுக்கு உரிய நேரடி வருவாயும் சந்தை வாய்ப்பும் உறுதி செய்யப்படுவதாக ஆசிய பெண் விவசாயிகள் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

முந்தைய செய்தி
13 பங்குகளில் முக்கிய மாற்றங்கள் - எதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!
அடுத்த செய்தி
இடி, மின்னலுடன் பலத்த மழைக்கு வாய்ப்பு - எங்கு தெரியுமா?

தொடர்புடைய செய்திகள்